ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

13கோடிக்கு “பிரா” – நாளை நடைபெறும் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியில்

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம் நடத்தும் வருடாந்த பேஷன் கண்காட்சி நாளை (நவம்பர் 10) நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 13 கோடி ரூபாய்) பெறுமதியான பிராவை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம் வருடந்தோறும் நியூயார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த வருடக் கண்காட்சியின்போது தங்கத்தில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபேன்டசி பிராவையும் அறிமுகப்படுத்துகிறது.

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப்பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து பெறப்பட்ட வைரங்கள், நீலக்கற்கள் என்று மொத்தம் 6500 ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற Mouawad என்ற நகை வடிவமைப்பு நிறுவனம், விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனத்துக்காக பிரத்தியேகமாக இந்த பிராவை தயாரித்துள்ளது.

Related posts

மாமியரின் வீட்டில் ஆங்கில பாடம் நடத்திய மருமகனால் துஷ்பிரயோகம்

wpengine

25,000 தண்டப்பணத்திற்கு யார் காரணம்? சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகள்? அமைச்சரின் பதில் என்ன?

wpengine

வறட்சி காலநிலை காரணமாக மின்வெட்டு அமுலுக்கு…?

wpengine