உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளையதினம் நாட்டுக்கு வரும் கோட்டாபய!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவிருந்ததாக அவரது உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.

எனினும், சில காரணங்களினால் அவரது பயணம் பிற்போடப்பட்டதாகவும், செப்டம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்பலாம் எனவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்..

இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

wpengine

இர்பான் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை…

wpengine

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதியமைச்சரே ஜனாதிபதி ரணில் : பட்ஜெட்டில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும் என்கிறார் நாமல்..!

wpengine