உள்நாட்டு செய்திகள்

அடுத்த பூரணையில் அனைத்து விகாரைகளிலும் இருள் சூழும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) 

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் வப் போயா (பூரணை) தினத்தன்று அனைத்து விகாரைகளிலும் மின்விளக்குகளை அணைக்குமாறு மத்திய மாகாண மகா சங்க சபையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாரைகளுக்கான மின் கட்டணங்கள் ஐந்து முதல் ஆறு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது விகாரைக்கான கட்டணம் 60,000  ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கலஹா சிறிசாந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு இவ்வாறு அதிக கட்டணம் விதிப்பது கவலைக்குரியது என்று குற்றம் சுமத்திய அவர், இந்த விடயத்துக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை மீது தனது ஆர்வத்தை தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

wpengine

JR’இன் பேரன் பிரதீப் ஜயவர்தன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட தீர்மானம்..

wpengine

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

wpengine