Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு CID இன் பணிப்பாளருக்கு அழைப்பு..!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க செய்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி அவர் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

அரச அலுவலகங்களின் அலுவலக நேரமாற்றம் இன்று(18) முதல் அமுலுக்கு…

wpengine

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை…

wpengine

ரயில் சேவைகளில் மாற்றமில்லை

wpengine