ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொலையாளியை காட்டிக்கொடுத்த கைக்கடிகாரம்

பிலியந்தலை தும்போவில எனுமிடத்தில் கடந்த 6ம் திகதி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட மாலைதீவுகள் பிரஜையான ஹூசைன் ரஸீமின் படுகொலை தொடர்பில், மாலைதீவுகளின் பிரஜையொருவரை (வயது 21) சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்பிலியானவையில் வைத்தே குறித்த சந்தேகநபரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவுகளில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, அதில் சிலர் இலங்கைக்கு தப்பிவந்துள்ளனர்.

அவ்வாறு தப்பி வந்திருந்த மாலைதீவுகள் பிரஜையான ஹூசைன் ரஸீம் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்வதற்கு, ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய்  ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

வானொன்றைக் கொள்வனவு செய்வது போல, அந்த நபரை கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர். அக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் அவருடைய கையிலிருந்த கைக்கடிகாரத்தை பொலிஸார் கைப்பற்றினர்.

படுகொலை செய்யப்பட்ட மாலைதீவுகளின் பிரஜை, அந்நாட்டில் இடம்பெற்ற இரண்டு படுகொலைகளுடன் தொடர்புடையவர் என்று அறியமுடிகின்றது.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி ஆற்றொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் சுழியோடிகளினால் அந்த குறித்த தொலைபேசி மீட்கப்பட்டது.

அந்த தொலைபேசிக்கு வருகின்ற குறுந்தகவல்கள், கொலை செய்யப்பட்டவரின் கைக்கடிகாரத்துக்கும் வரும். அதனடிப்படையிலேயே இக்கொலையின் சந்தேகநரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தக் கைக்கடிகாரம் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்றும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட தொலைபேசி ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நான் கூறிய விடயங்களுக்கு செவிசாய்க்காவிடின் விலகிக்கொள்வேன் – லசித் மாலிங்க

wpengine

புற்று நோயாளியான 92வயது மூதாட்டி மரதனில் சாதனை

wpengine

சர்ச்சைக்குரிய நபரின் ஊடக வலையமைப்பு கனவை சிதறடித்த ஜனாதிபதி மைத்திரி

wpengine