Top Story 1உள்நாட்டு செய்திகள்

மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர்.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts

டீசலுக்கான உற்பத்தி வரி ரூ.10ஆல் அதிகரிப்பு..

wpengine

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…

wpengine

சுகாதார விதிகள் அடங்கிய கோவை இன்று

wpengine