உள்நாட்டு செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய..!

நாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை காலம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மருத்துவ நிபுணர்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடுவோர் தேவையான அனுமதியைப் பெற்று நாட்டைவிட்டு வெளியேற முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் சேவையிலிருந்து வெளியேறியவர்களாகக் கருதப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1001 பேர் கைது

wpengine

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல்…

wpengine

சபாநாயகர், ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை…

wpengine