உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் ரத்து

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்தப் பொறுப்பினை கடற்படையினரிடம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாத்தல், ஆயுதங்களை வாடகைக்கு வழங்குதல்  உள்ளிட்ட பல்வேறு கருமங்களில் ஈடுபட்டு வந்த அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் அவன்ட் கார்ட் கப்பல் குறித்து விசேட கூட்டமொன்று நடாத்தப்பட்டது.

அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் காணப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் கடற்படையினரிடம் ஒப்படைப்பதற்கு குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவன்ட் கார்ட் தனியார் நிறுவனம் மிதக்கும் ஆயுதக் கப்பலை உரிய விதிமுறைகளின் அடிப்படையில் நடத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 

Related posts

Update – ஐபிஎல் கிரிக்கெட் ஏல விபரங்கள் முழுமையாக… (PHOTOS)

wpengine

களுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை…

wpengine

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50,000 ரூபா தண்டப் பணம்…

wpengine