உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு விளையாட மறுப்பு

வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் விளையாட ஒப்பந்ததில் உள்ள 16 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

வங்கதேசத்தில் பிரீமியர் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 22 முதல் டிசம்பர் 15 வரை நடக்கிறது. இதில் விளையாட இலங்கை வீரர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒப்பந்ததில் உள்ள வீரர்கள் பலர் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் இடம்பெறாத ஒப்பந்த வீரர்கள் இலங்கையில் எதிர்வரும் 20ம் திகதி தொடங்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வீரர்களின் தரத்தை மேம்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டு மேலாளர் கார்ல்டன் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொட்டாஞ்சேனையில் வீதி போக்குவரத்து மட்டு

wpengine

20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

wpengine

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

wpengine