உள்நாட்டு செய்திகள்

சவூதி அரேபிய நிறுவனத்துக்கு விற்கப்பட்டது WWE..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE வை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

WWE இன் இணை-தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த ஸ்டெபானி மக்மஹோன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, வின்ஸ் மக்மஹோன் தனது ஓய்வு முடிவை கைவிட்டு, மீண்டும் WWE குழுவின் தலைவராக திரும்பியுள்ளதாகவும், நிறுவனத்தை பொதுப் பங்குச் சந்தையில் இருந்து விலக்கி மீண்டும் ஒரு தனியார் வணிகமாக மாற்றுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. WWE என்பது உலகம் முழுவதும், மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் மிகப்பெரிய தொழில்முறை  நிறுவனமாகும்.

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இன்னும் தீர்மானமில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு..

wpengine

புத்தாண்டில் கைகலப்புகள் அதிகளவு பதிவு…

wpengine

கைதாவதை தடுக்கக்கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு

wpengine