Top Story 1உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்ட, என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது..!

மக்கள் பணம் தராவிட்டால், தான் சிறைக்குச் செல்லத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் 10 கோடி ரூபாவை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எந்தவிதத்திலும் எனக்கு 10 கோடி ரூபாவை வழங்கக்கூடிய பொருளாதார பின்புலம் கிடையாது. மக்கள் அதனைத் திரட்டித் தருவர் என்றே நான் எதிர்பார்க்கின்றேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்டுவதற்கு என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது. அவ்வாறு பணம் கிடைக்காவிட்டால் நான் சிறைக்குச் செல்வேன்”என்று கூறியுள்ளார்.

Related posts

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பம்…

wpengine

வித்தியாவின் கொலை – சம்பவத்திற்கு முதல் நாளே கடத்தத் திட்டம்

wpengine

பயிற்சி போட்டியில் இலங்கையினை பின்தள்ளி நியூசிலாந்து அணி அபார வெற்றி

wpengine