Top Story 2உள்நாட்டு செய்திகள்

சவூதிவுடனான உறவை மேம்படுத்த இலங்கை முயற்சி..!

முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் ஊடாக சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அலி சப்ரி,சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்தநிலையில் வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை பெறுவதற்கான தற்போதைய கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தாம் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாரம்பரியமாக இலங்கை சவுதி அரேபியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது. எனவே அதை வலுப்படுத்த முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

wpengine

(UPDATE) சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

எவன்காட் கப்பல் விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

wpengine