உள்நாட்டு செய்திகள்

டயனாவை கைது செய்ய பிடியாணை தேவையில்​லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார்.

Related posts

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்

wpengine

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்கு அனுமதி

wpengine

IMF குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

News Editor