உள்நாட்டு செய்திகள்

மனோ கணேசன் முற்றாக மறுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஏப்ரல் 25ம் திகதி  நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை.

இது திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. இது, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் இச்செய்தி வந்தது.

ஐக்கிய மக்கள் கூட்டணிசக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை.

Related posts

தேர்தல்கள் செயலகத்தினால் சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு கடிதம்..

wpengine

நாட்டில் 2890 பேருக்கு கொரோனா

wpengine

விஷேட சுற்றிவளைப்பில் 32 பேர் கைது…

wpengine