Top Story 1

கோட்டாபய வசமானது மகிந்தவின் வீடு – தொடரும் விரிவான பாதுகாப்பு..!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அரசாங்கம் ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள வீடு ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்ததோடு, பாதுகாப்புப் படை பிரதானி மற்றும் விமானப் படைத் தளபதி ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

இந்த வீடு முதலில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கோட்டாபய ராஜபக்ஷவின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அவர் வசித்துவந்த குடியிருப்பில் அதிக சத்தம் ஏற்படுவதாகவும் இதனை காரணமாக கொண்டு கோட்டாபய மிகவும் அமைதியான சூழலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட அதே விரிவான பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு தயாராகும் ஜனாதிபதி ரணில்

News Editor

பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாது

wpengine

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுனர்

wpengine