Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை ஹஜ் குழுவில் முறைகேடு – ஹஜ் சென்ற நான்கு பேர் தொடர்பில் போட்டுடைக்கும் இம்ரான் மஹ்ரூப்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹஜ் நிதியத்தில் 14 கோடி 59 இலட்சத்து 29 ஆயிரத்து 8 நூற்று 58 ரூபாவும் 83 சதமும் கடந்த மார்ச் 28 ஆம் திகதி மிகுதியாக காணப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாகவே இவ்வருடத்திற்கான ஹஜ் குழுவின் உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்களும் இலங்கை ஹஜ் யாத்திரீகர்களுக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது சவூதி அரேபியா சென்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில், ஹஜ் குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு தலா 2 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான விமான டிக்கட், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, குறித்த நான்கு பேரினதும் சவூதி அரேபிய விஜயத்திற்கான செலவுகளுக்கு மொத்தமாக 40 இலட்சம் ரூபா பணம் ஹஜ் நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில் குறிப்பிட்ட இந்த பாரிய நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஹஜ் யாத்திரீகரின் நலன்புரி நடவடிக்கைளுக்காக சென்ற ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு ஹஜ் நிதியத்தின் நிதியினை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் நலன்புரி நிதியம் கையாள்வது தொடர்பில் ஒரு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும். இது விடயத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றுக்கு வர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஹஜ் குழுவின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கூட்டாக இணைந்து புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் எழுத்து மூல முறைப்பாடொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், ஹஜ் நலன்புரிக்கு திணைக்களத்திலுள்ள பெண் உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் ஆண் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளர்.
இதேவேளை, இவ்வருட ஹஜ் குழுவிற்கு எதிராக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு முகவர் நிறுவனங்களினால் உயர் நீதிமன்ற்ததில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருட கடமைக்கான ஏற்பாடுகளின் போது, ஏற்கனவே 2013ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல காரணங்களை முன்வைத்தே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்த தருனத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் மார்க்க அனுஷ்டானம் இருக்கின்றது.
நாடு முழுவதும் மாடுகளுக்கு ஒருவகை தொற்று நோய் பரவியிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பான சுகாதார அமைச்சு முறையான எச்சரிக்கை விடுத்துள்ளதா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எவ்விதமான வழிகாட்டல்களும் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்க தவறியுள்ளது. இது தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எச்.ஏ.ஹலீம் பல தடவை துறைசார் மேற்பார்வை குழுவில் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
VIDEO

Related posts

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

wpengine

ஆள்மாறாட்டம் செய்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற நபர் கைது

wpengine

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

wpengine