Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கெஹலியவை ராஜினாமா செய்யுமாறு கோரியது மனைவியும் அவரது பிள்ளைகளுமே..!

தற்போது சுகாதாரதுறை பாரிய நெருக்கடி மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு மனைவி மற்றும் பிள்ளைகள் மாத்திரமே தன்னிடம் கூறியுள்ளதாகவும், வேறு எவரும் அவ்வாறான கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து, சவால்களில் இருந்து தப்பி ஓடவில்லை என்றும், அவற்றை எதிர்கொள்ளும் வலிமை தனக்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கான தீர்வுகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Related posts

தபால் வாக்கெடுப்பு இன்று மற்றும் 25,26ம் திகதிகளில்..

wpengine

இலங்கைக்கான விமான சேவைகள் ஜூலையில்

wpengine

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட ஆளுநர்கள் – ரணில் திடீர் முடிவு..!

wpengine