Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தமிழ் எம்.பிக்களை சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்துங்கள் – தெற்கு அரசியல்வாதிகளுக்கு வலியுறுத்தும் சந்திரிக்கா..!

இனவாதம், மதவாதம் பேசி வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சீண்டிப் பார்ப்பதை தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாராநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் நேற்றைய தினம் (30) கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், 13 மைனஸ், 13 பிளஸ் எனக் கூறுபவர்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.

இனவாதம்

இலங்கையில் அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில், நாட்டில் இனவெறியை, மத வெறியை தூண்டும் கருத்துக்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கின்றன.

இது முழு நாட்டுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். வடக்கு கிழக்கு மக்களோ அல்லது தெற்கில் உள்ள மக்களோ மீண்டும் ஒரு வன்முறையை விரும்பவில்லை.

அரசியல்வாதிகள் தான் தாங்கள் சுயலாபத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசு இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Related posts

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

wpengine

ஹெட்ரிக் சாதனையை சாதித்தார் ஜமைக்காவின் புயல். (VIDEO))

wpengine

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளன…

wpengine