Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாத்தறை பிரதேச பாடசாலை அறையொன்றில் இருந்து பல வெடிபொருட்கள் மீட்பு..!

பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இருந்து இந்த வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலையின் குறித்த  அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20ம், மிமீ 3.2 தோட்டாக்கள் 24ம் , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 ம் மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது, ​​TNT  என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்

wpengine

13ம் திகதி மீளவும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அர்ஜுனுக்கு அழைப்பாணை..

wpengine

மன்னார் – புத்தளம் பாதையினை திறக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமரிடம் ரிஷாட் வேண்டுகோள்

wpengine