Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமல் பகிர்ந்த மீலாத் வாழ்த்துச்செய்தியின் இடையில் புகுந்து கருணா அம்மான் இட்ட பாரதூரமான பின்னூட்டல்..!

நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மிலாத் நபி திருநாளிற்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.

அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் போதனைகள், அன்பானவர்களாகவும், அதிக இரக்கமுள்ளவர்களாகவும், பகிரப்பட்ட மனித நேயத்தில் ஒன்றுபடவும் நம்மை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் டுவிட்டரில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,”நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை.நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் நீங்கள் செய்யவில்லை. நான் தினமும் குடிக்கிறேன். உங்களுக்கு இப்போது மகிழ்ச்சி தானே.

பிள்ளையானும் எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது இல்லை. நான் மிகவும் சோகமாக உள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.

Related posts

மற்றுமொரு கொரோனா கொத்தணி : 80 பேருக்கு தொற்று

wpengine

பிரதமர் நாளை பங்களாதேஷ் நோக்கி

wpengine

கல்வி சாரா ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு…

wpengine