உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்காளர்களை தன்னால் கவரமுடியாது என்பதால் தேர்தல்களை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி உறுதியாக உள்ளார் – விமல்வீரவன்ச..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேர்தல்களை பிற்போடும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் முயற்சிகளிற்கு மேற்குலகம் ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் மேற்குலகநாடுகள் ஜனாதிபதி நாடாளுமன்ற தேர்தல்களை பிற்போடும் ஜனாதிபதியின் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கும் மேற்குலக நாடுகளின் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இது காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது பேர் – மறைக்கப்பட்ட கதை என்ற தனது நூலின் ஆங்கில ரஸ்ய மொழிபெயர்ப்பை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மாகாணசபை உள்ளுராட்சி தேர்தல்களை காணாமல் ஆக்கியுள்ளார், ஜனாதிபதி தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல்களிற்கும் அதனை செய்வது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு முடியாத விடயமல்ல என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்களை பிற்போடுவதற்கு ஏற்ற விதத்தில் வன்முறையான சூழல் ஒன்று உருவாக்கப்படலாம் மேற்குலகம் அதற்கு உதவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை தன்னால் கவரமுடியாது என்பதால் தேர்தல்களை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி உறுதியாக உள்ளார், எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகிய பின்னர் தன்னை( சபாநாயகரை ) ஜனாதிபதியாக்க அமெரிக்க தூதுவர் முன்வந்தார் என்ற எனது குற்றச்சாட்டை சபாநாயகர் இன்னமும் மறுக்கவில்லை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்

இந்த நூல் வெளியீடு அன்று ஏப்பிரல் 25 ம் திகதி நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இன்னமும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை ஜனாதிபதியின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து நேர்மையான எதிர்கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வராவிட்டால் நாடு மீளமுடியாத பலவீனமான பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கட் தேர்தல் நாளை(21)…

wpengine

அங்குணகொலபெலஸ்ஸ கைதிகள் வேறு சிறைச்சாலைகளிற்கு மாற்றம்…

wpengine

வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு

Azeem Kilabdeen