Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிமன்றம் நஷ்ட ஈட்டுக்கான பணம் ராஜபக்ஷக்களிடம் உள்ளது – சொல்கிறார் சுமந்திரன்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றம் நஷ்டஈட்டை வழங்கு மாறு உத்தரவிட்டால் 22 மில்லியன் மக்க ளுக்கும் நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்ஷக்களிடம் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு வெளியே ராஜபக்ஷ சகோதரர்கள் சேர்த்துவைத்துள்ள பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் அனைத்தையும் நாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அந்த பணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பலாம் என தெரிவித்துள்ள சுமந்திரன், முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதாரர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களும் பொதுநிதியை கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நஷ்டஈட்டை செலுத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேபானம அரலிய உயன சந்தியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு..

wpengine

தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் 17ம் திகதி…

wpengine

சார்க் மாநாட்டை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை – அரசு

wpengine