Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

விசேட சுற்றிவளைப்பில் 224 சாரதிகள் கைது

wpengine

ரஞ்சனின் பொது மன்னிப்பு குறித்து நீதி அமைச்சர் கருத்து!

News Editor

GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்

wpengine