Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பல சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியர்கள், தாதியர்களின் சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும், எஞ்சிய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் நாம் வினவியபோது தெரிவித்தார்.

எனினும், அவசர சிகிச்சைச் சேவைகள் தொடரும் எனவும், அனைத்து வைத்தியர்களும் 24 மணிநேர சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அல்ல உயிரைக் காப்பாற்றுவதே கடமை எனத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர், ஆபத்தான நோயாளர்களை வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் தெரிவித்தார்.

35,000 ரூபா கொடுப்பனவை கோரி சுகாதார சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

Related posts

புதிய ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 62 ஆயிரம் டொலர்கள் நிதி தேவை…

wpengine

வாரியபொல சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்

wpengine

10000/- வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்!

Azeem Kilabdeen