Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக இம்ரான் கான் அறிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் (101 இடங்களில்) கைப்பற்றியிருந்தாலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் கூறியதாவது:

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே, இதில் எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம். அதைவிட, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். புதிய பாராளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என்றார்.

Related posts

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய 3 சட்டங்கள்

wpengine

விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு…

wpengine

இன்று முதல் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள்

wpengine