Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவு தேவை’ – பசில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

‘.. மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான் அதைச் செய்கிறேன். நான் எப்போதும் டிசம்பரில் செல்வேன், நான் என் குழந்தைகளுடன் ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே செலவிடுகிறேன், நான் அந்த சில நாட்களை செலவழித்துவிட்டு திரும்பி வருகிறேன். எதிர்காலத்தில் நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எந்தத் தேர்தல் நடந்தாலும் அதனை ஏற்பாடு செய்ய என்னால் முடியும்.

யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாவார். பொஹட்டுவ செம்ம ஸ்ட்ராங். அதனாலேயே தான் முன்னின்று பணிகளை ஏற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம். ஒருபோதும் மக்களை நாம் ஏமாற்றியதில்லை. சில இடங்களில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, நாங்கள் சொல்வதை மக்கள் ஏற்கவில்லை…’

Related posts

DNA மாதிரிகள் பொருந்தவில்லை

wpengine

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றுகிறார்.. (Update)

wpengine

ராஜபக்சக்களின் வரிசையில் ரணிலின் பதவி பறிப்புக்கு நாள் குறிப்பு..!

wpengine