உள்நாட்டு செய்திகள்

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு புதனன்று வாக்கெடுப்பு

தேசிய அரசின் 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 2ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன வாக்களிக்கும்.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ள பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு தரப்பினர் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர்.

மேற்படி இரு தரப்பினரும், வரவு – செலவுத் திட்டத்துக்கு தமது எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

இம்மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.

தேசிய அரசின் இந்த வரவு – செலவுத் திட்டமானது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறும்.

ஜே.வி.பி. மற்றும் மஹிந்த தரப்பு எதிர்த்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருப்பதால் வரவு – செலவுத் திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரசு நிறைவேற்றும் நிலைமை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி…

wpengine

தேசிய மரபுரிமை சின்னமாக மாற்றப்படும் இலங்கையின் முக்கிய பகுதி

wpengine

கரையோர புகையிரத சேவையில் தாமதம்

wpengine