Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –


சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கல்குடா பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி கைது…

wpengine

66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்…

wpengine