உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களின் தீர்மானம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts

கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

wpengine

UPDATE – கனரக லொறி ஒன்று குடைசாய்ந்ததில் பாதிப்படைந்த போக்குவரத்து வழமைக்கு..

wpengine

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு…

wpengine