Top Story 2உள்நாட்டு செய்திகள்

யோஷித்த ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷித்த ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து யோஷித்த ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரியந்தவின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கப்படும்

wpengine

யாழ்.பொலிசாரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து…

wpengine

வயிறு கலங்க மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸி வீரர்…

wpengine