Top Story 2சூடான செய்திகள்

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுகான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ. ஏ.சீ.என். தலங்கம இதற்கு முன்னதாக மீன்பிடி அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் ஜே. எம். ஜயசிங்க கேகாலை மாவட்ட செயலாளராகவும் சேவையாற்றியுள்ளனர்.

Related posts

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 03 பேர் ஆளும் கட்சியுடன் இணைவு…

wpengine

75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

wpengine

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!

wpengine