Top Story 3உலக செய்திகள்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவின் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று காலை 11.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று காலை 11.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவானதாக தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 17.41 பாகை வடக்கு அட்சரேகையிலும், 75.21 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவை போல் பதவி ஆசை எனக்கில்லை – வசந்த முதலிகே..!

wpengine

துபாய் முழுவதும் பறக்கும் இந்தியக் கொடி

wpengine

கொரோனாவுக்கு போட்டியாக குரங்கு அம்மை

wpengine