Top Story 3உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகலேவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (06) மாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய பொதானேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகலேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மாலபே தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை…

wpengine

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி இன்று(13) நிறைவேற்றம்…

wpengine

இலங்கையில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

wpengine