உள்நாட்டு செய்திகள்

ஏமாற்றப்பட்ட பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்களின் எதிர்பார்ப்புகள்

8 வருடத்திற்கு மேலாக சேவையாற்றிய பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றமடைந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 8 வருடம் தொடர்ந்து சேவையாற்றிய பேராசிரியர்களுக்கு தீர்வை வரிச் சலுகையின் கீழ் வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கத்தினால் ஏற்கனவே  அறிவித்திருந்த நிலையில் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலம் அதற்கான எந்தவித யோசனையும் முன்வைக்காமையானது பேராசிரியர்களை ஏமாற்றியுள்ள ஒரு செயல் என இச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று (2) கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே சங்கத்தின் செயலாளர் ஏ.டபிள்யு.விஜேரத்ன இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

Related posts

மாணவர்களின் மஹபொல நிறுத்தத்திற்கு FUTA இணக்கம்…

wpengine

இன்று(23) நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு…

wpengine

விரைவில் மின் கட்டண திருத்தம்

Azeem Kilabdeen