Top Story 3உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது.

அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தன.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

அத்துருகிரிய – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

wpengine

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையினை கைச்சாத்திட அரசு கூடிய கவனம்

wpengine

கடல் அலை உயர்வடையக்கூடும்

wpengine