ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கல்கிஸ்ஸ பிரதேசங்களில் ஹெரோயினுடன் ஐவர் கைது!

வெள்ளவத்தை வேலுவனாராம வீதியில் 10 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவரை வெள்ளவத்தை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டதாகவும்,

இப்பெண்ணுடன் மேலும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சந்தேக நபர்கள் இன்று  கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கல்கிஸ்ஸ பிரதேச புகையிரத நிலையத்திற்கு அருகில் 12கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் கூறியுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,கு

றித்த நபர் ரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் இன்று   கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

மரண தண்டனையை எதிர்க்கிறார் மஹிந்தர்

wpengine

Offer பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள்

wpengine

முன்னாள் சபாநாயகரின் உடல் நிலை கவலைக்கிடம்

wpengine