விளையாட்டு

முறுக்கு மீசைக்கு ஆசைப்படும் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டிராவிட் ரசிகர்களின் கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்படும் டிராவிட் எதிரணிக்கு எப்போதும் தலைவலியாய் இருப்பவர். அதேசமயம் தோற்றத்திலும், குணத்திலும் மிகவும் எளியமையான போக்கை கடைபிடிப்பவர்.

இந்நிலையில் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் ரசிகர்கள், நீங்கள் ஏன் தவான், கோஹ்லி, ஜடேஜா, கெய்ல் போன்றவர்கள் போன்று “ஹேர் ஸ்டைல்” வைக்க முயற்சிக்கவில்லை என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த டிராவிட், “எனக்கு அந்தவாறு முடிவெட்டிக் கொள்வது பிடிக்காதது. முக்கியமாக நீங்கள் காலையில் எழுந்து உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

எனக்கு தற்போது சாதாரணமாக இருக்கும் “ஹேர்ஸ்டைல்” தான் பிடித்திருக்கிறது. ஒருவேளை அந்தவாறு தலைமுடியை வித்தியாசமாக வெட்டிக் கொண்டால், காலை நேரத்தில் கண்ணாடியில் நான் என்னை பார்த்தே பயந்து போய்விடுவேன்” என்றார்.

மேலும், அவர் கூறுகையில், இருந்தாலும், ஷிகர் தவானின் முறுக்கு மீசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் அந்த மீசையை முறுக்கிக் கொண்டே இருப்பார் அதனால் பிடிக்கும்.

எனக்கும் அது போன்று அழகான மீசை இருந்திருந்தால் அவர் போல் வைத்திருப்பேன்” என்று ஜாலியாக கூறினார்.

 

Related posts

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கான அணியினர் விவரம் வெளியீடு… [பட்டியல்]

wpengine

நட்சத்திர வீரரொருவர் IPL போட்டிகள் அனைத்திலிருந்தும் விலகல்

wpengine

20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

wpengine