உள்நாட்டு செய்திகள்

ஜனவரி முதல் புதிய தேசிய அடையாள அட்டை

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் புதிய அட்டைகளாக விநியோகம் செய்யப்படும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரையில் 9 இலக்கங்களில் வழங்கப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 12 தொடர் இலக்கங்களைக் கொண்டதாக அமையும் என குறிப்பிட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் டி.எம். ரஞ்சனி ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய இலக்கங்களை கணனிகளில் உள்ளடக்கி மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் ஆவணங்களை பொறுப்பேற்கும் கால அவகாசம் முற்பகல் 11.00 மணியுடன் பூர்த்தியாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு..!

wpengine

இலங்கையில் 2646 பேருக்கு கொரோனா

wpengine

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

wpengine