உள்நாட்டு செய்திகள்

“புத்தளத்தின் எதிர்பார்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதில் என்றும் நான் முதன்மையானவன் என்ற வகையில் மாணவன் முஹம்மத் முன்சிப் பெற்றுக் கொடுத்துள்ள பெறுபேறு என்பது எமது சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.” -தேசியத்தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன்-

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் தேசிய மட்டத்தில், உயிரியல் விஞ்ஞான பிரிவில் 2 வது இடத்தை பெற்ற, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான பிரிவு மாணவன் முஹம்மத் முன்சிபுக்கு, அ.இ.ம.க வின் தேசிய தலைவரும், கைத்தொழில், வர்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
கற்றல் செயற்பாடுகள் என்பது மாணவனின் முயற்சியில் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களின் பங்களிப்பிலும் தங்கியுள்ளது. அதனை இந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்துரைத்துள்ளார்கள் என்பதற்கு இதனை ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
மேலும், புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லுாரி மாணவன் முஹம்மத் முன்சிபின் இந்த முயற்சி தொடர்பில் தான் மகிழ்வுறுவதாகவும், எதிர்காலத்தில் இ்ந்த நாடு எதிர்பார்க்கும் துறைசாந்தவராக அவர் வரவேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாகவும், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரதேச அரசியல் தலைவர்கள் ஆகியோரின் தொடராத ஒத்துழைப்புக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் அமைச்சர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறி்ப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை வருகிறார் ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதுவர்

wpengine

தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்தின் பதில் கடமை நேர பணிப்பாளர் நீக்கம்…

wpengine

உலகில் பிரபல்யமான அலிபாபா நிறுவனம், இலங்கையில் முதலிடுகிறது..

wpengine