உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த விரிவுரையாளர்

கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விரிவுரையாளர் ஒருவர் நேற்று(4) கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த 35 வயதான சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பெலிவுல்ஓய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பெண்ணால் சமனலவெவ பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த விரிவுளையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார் சுஜித்

wpengine

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

News Editor

உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் ‘கொழும்பு பிரகடனம்’ ஜெனிவாவில் சமர்ப்பிப்பு…

wpengine