உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகா விடயத்தில் பொலிஸ் சிறுபிள்ளைத்தனமாய் நடந்துகொள்கிறது – பிபிஎஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா விடயத்தில் பொலிஸ் குழந்தைப் பிள்ளைகள் போன்று செயற்படுகிறது என்று பொதுபலசேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய போது, ஆள் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஹிருணிகா விடயத்தில் பொலிஸ், சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்ப்பார்ப்பது பொருத்தமற்ற செயல்,இந்த விடயத்தில் பொலிஸின் நடவடிக்கை திருப்தி தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் முன்னதாக தம்மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜராகியதாக குறிப்பிட்ட ஞானசார தேரர்; அவ்வாறு சென்றமையானது நேரத்தை வீணடித்த நடவடிக்கை என்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்

Related posts

இதுவரை 135,519 PCR பரிசோதனைகள்

wpengine

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் : கட்டாய வரி

wpengine

“தயாசிறியை எந்த நேரத்திலும் கட்சி ஏற்கத் தயார்: ஆனால் எந்தப் பதவிகளும் வழங்கப்படாது”

wpengine