உள்நாட்டு செய்திகள்

பசில் படுத்திருந்த அம்பூலன்ஸ் இதுதான்:

நேற்றைய தினம் பசில் ராஜபக்ஷவை , கடுவெல நீதிமன்றிற்கு பொலிசார் கொண்டுசென்றார்கள்.

அவர் அம்பூலன்சில் படுத்தபடியே நீதிமன்றம் சென்றார். தன்னால் எழுந்து நீதிமன்றம் வரை நடக்க முடியாது என்று பசில் தெரிவித்துவிட்டார்.

இதனால் கடுவெல நீதிமன்ற நீதவான், வெளியே வந்து அம்பூலன்சில் ஏறி பசிலை பார்வையிட்டார்.

பின்னர் அவர் இறங்கிச் சென்றுவிட்டார்.

உளே சென்ற நீதிபதி அவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருந்தால் பசிலின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மகிந்த தரப்பு வக்கீல் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார்.

ஆனால் அதனை நீதவான் ஏற்றுக்கொள்ளவில்லை

Related posts

சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலையில், மற்றுமோர் சந்தேகநபர் கைது..

wpengine

நாடாளுமன்றம் நாளை முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது

wpengine

நேவி சம்பத்’தை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்…

wpengine