உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அவன்ட் கார்ட், ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அவன்ட் கார்ட் மற்றும் ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சியாக விளங்குபவர் என கருதப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயசூர்ய இலங்கையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

பாரிய மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பல தடவைகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்த இவர் ஜனவரி தேர்தலிற்கு பின்னர் உள்நாட்டு விவகார அமைச்சிற்கு மாற்றபட்டிருந்தார். இதேவேளை விசாரணைகளின் முக்கிய தருணத்தில் இவர் இலங்கையை விட்டு வெளியேறியதற்கு முக்கிய அமைச்சர் ஓருவர் உதவியுள்ளார் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

Related posts

விசேட சுற்றிவளைப்பில் 376 பேர் கைது

wpengine

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

நாடளாவிய ரீதியில் தற்போது இடியுடன் கூடிய மழை..

wpengine