உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞானசார தேரர் விளக்கமறியல் (UPDATE)

இன்று காலை சரணடைந்த பின் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சற்றுமுன்னர் பொது பல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்துள்ளார்.

(2ம் இணைப்பு)

ஹோமாகம நீதவான் நீதிமன்றில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஊடகவியலாளரின் மனைவி சந்த்யா எக்னலிகொடவை திட்டி அச்சுறுத்தியதாக தெரிவிக்கும் பொது பல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசாரவை கைது செய்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நேற்றைய தினம் உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தின்போது, சந்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் அவ்விடத்திலிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றதோடு, எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் இது குறித்து நீதவானிடம் முறையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்த ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான குறித்த பிடியாணையை நேற்று திங்களன்று வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்படையின் முன்னாள் தளபதி குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்..

wpengine

ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை

wpengine

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அனுமதி..!

wpengine