உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போராட்டக்களத்தில் கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள்

கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை வலியுறுத்தி கொழும்பு பல்கலைகழக மருத்து பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனை ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் சத்தியாகிரக போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக இதன் போது அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த தனியார் மருத்துவ கல்லூரி மாவணர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சி பெறுவதற்கு வழங்கிய அனுமதி இரத்து செய்யப்படும் வரையிலும் தமது சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும், தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய தீர்வு பெற்றுதர தவறும் பட்சத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்

wpengine

ஷங்கிரி – லா ஹோட்டலுக்கு காலவரையின்றி பூட்டு…

wpengine

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…

wpengine