உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

16 இலங்கை வீரர்கள் ஏலம் – திசராவுக்கு மட்டுமே வாய்ப்பு

பெங்களூரில் நடைபெற்ற 9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை போயுள்ளார்.

ஏலம் தொடர்பான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணியில் சில முன்னணி வீரர்கள் கூட ஏலம் போகாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 இலங்கை வீரர்கள்

இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த 16 வீரர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. திசர பெரேரா, மஹேலஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, நுவன் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ், சசித்ரா சேனநாயகே, துஷ்மந்தா சமீரா, டிஎம். தில்ஷன், ஜீவன் மெண்டிஸ், தில்ருவன் பெரேரா, ஷேஹன் ஜெயசூர்யா, தாசன் சனகா, மிலிந்தா சிறிவர்தன, இசுரு உதனா, தில்ஷன் முனவீர, சீகுகே பிரசன்ன.

இதில், திசரவுக்கு மட்டுமே வாய்ப்பு. இதில் திசரவை மட்டும் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் ஏடுத்தது.

மற்ற 15 வீரர்களையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த 15 பேரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

பரிந்துரை அறிக்கை திங்களன்று

wpengine

எப்போதும் பிறருக்கு உதவ நினைக்கும் கண் பார்வையற்ற மாணவி, 9 A சித்திகளை பெற்று சாதனை..!

wpengine

சுமார் 96 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் 04 பெண்கள் கைது…

wpengine