உள்நாட்டு செய்திகள்

சுஹத கம்லத்தை சட்டமா அதிபராக நியமிக்க அரசாங்கம் அஞ்சுகிறது – கம்மன்பில

அரசியல்வாதிகள் முன்னால் மண்டியிடாத அதிகாரி என்பதன் காரணமாக அரசாங்கம் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத்தை சட்டமா அதிபராக நியமிக்க அஞ்சுவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஓய்வு பெற்றார். வெற்றிடமாக இருக்கும் அந்தப் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிப்புரியும் சிரேஷ்ட அதிகாரி சுஹத கம்லத் அரசியல்வாதிகளின் முன்னால் அடிபணியாதவர் என்பதால், அரசாங்கம் அவரை சட்டமா அதிபராக நியமிக்க அஞ்சுகிறதா?.

தற்போது உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் அடிப்படை உரிமை மீறல்கள் வழக்குகள் சட்டவிரோதமானவை. இதனால், உடனடியாக சட்டமா அதிபர் நியமிக்கப்பட வேண்டும்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் போலியானவையாக தெரிவிக்கின்றன.

ஹிருணிக்கா மற்றும் யோஷித்த ராஜபக்ஷ விவகாரங்களில் பொலிஸார் இரண்டு விதமாக நடந்து கொண்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி…

wpengine

ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைப்பு..

wpengine

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு சிறைத்தண்டனை

Azeem Kilabdeen