உள்நாட்டு செய்திகள்

தேர்தல் நடவடிக்கையில் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி பயன்பாட்டிற்கு தடை

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி ஆகியனவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்காகவும் பிரச்சார நோக்கில் தேசிய கீதம் அல்லது தேசிய கொடியை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், கட்சிகளையோ, வேட்பாளர்களையோ அல்லது குழுக்களையோ பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவ்வாறு கொடி, கீதம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

மாகாண, பிரதேச கொடிகள், மதக் கொடிகள், மதத் தலைவர்களின் அல்லது புனிதா்களின் படங்கள் போன்றனவும் தேர்தல் விளம்பரங்களில் உள்ளடக்க அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்கள் வாக்குரிமையை ஓர் அடிப்படை உரிமையாகக் கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கும் ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

wpengine

ஜா-எல சந்திப் பகுதியில் வாகன நெரிசலுடன் போக்குவரத்திலும் தடை.

wpengine