உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐநா 31வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று (29) ஆரம்பமாகிறது.
எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஆரம்பித்து வைப்பதுடன் அவர் உரையாற்றவுமுள்ளார்.

இவ்வுரையில் இலங்கை விஜயத்தின் போது பெற்ற அனுபவங்கள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை உயர்மட்ட தலைவர்களின் உரைகள் நடைபெறவிருப்பதுடன், மனித உரிமை, புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனா பயணித்தார் ஜனாதிபதி

Azeem Kilabdeen

கண்டியன் விவாக சட்டங்களை நீக்கவேண்டும் – அத்தரலியே தேரர்

wpengine

இ.போ.ச பேருந்து கட்டணங்களும் இன்று முதல் குறைப்பு..

wpengine