உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யா கொலை – மேலும் 2 சந்தேகநபர்கள் கைது

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் திங்கட்கிழமை (29) கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய – மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரிய பிரச்சினைக்கு தீர்வு

wpengine

நோபல் பரிசிற்கான பரிந்துரைப் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரி இணைவு..

wpengine

கனடா பிரதமரின் அறிக்கைக்கு அலிசப்ரி கண்டனம்..!

wpengine